நாக்கு, நம் உடம்பின் தன்மையை அப்படியே வெளிக்காட்டும் கண்ணாடி . நாக்கின் தன்மையை வைத்தே உடம்பில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விட முடியும். அதனால்தான், எந்தப் பிரச்னை என்றாலும் மருத்துவர்கள் முதலில் நாக்கைக்காண்பியுங்கள் என்று டார்ச் அடித்துப் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்த உடனே, நம் உடலுக்கு என்ன பாதிப்பு என்பதை ஓரளவுக்கு அனுமானித்து விடுவார்கள். பொதுவாக நம் நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். அப்படித்தான் இருக்கவும் வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நம் உடலில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

No comments:
Post a Comment